அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சினெர் மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தியிருந்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஜானிக் சினெர் 6-3, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2ஆவது முறையாக ஜானிக் சினெர் அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here