நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் விஜய் நடிக்கும் 69 படமான ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப்படத்திற்கு `ஜன நாயகன்’ என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

அதற்கு முக்கிய காரணம் இதுவே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த போஸ்டரில் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டு அவரது ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போல் காட்சி அமைந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்போஸ்டரில் விஜய் சாட்டை எடுத்து சுழற்றுவது போன்றும் அதில் நான் ஆணையிட்டால் வசன் இடம் பெற்றுள்ளது.

படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here