சூப்பர் 6 சுற்றில் ஸ்காட்லாந்தை சுருட்டியது இந்தியா

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 6 சுற்றிn 2வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் இன்று மோதியது.

டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை கமாலினி அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க வீராங்கனை கோங்கடி திரிஷா அதிரடியில் மிரட்டினார். இவர் 59 பந்துகளில் 4 சிக்சர், 13 பவுண்டரி உள்பா 110 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 147 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்துவீசி அசத்தினர்.

இறுதியில் ஸ்காட்லாந்து அணி 14 ஓவரில் 58 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் ஆயுஷி சுக்லா 4 விக்கெட்டும், வைஷ்ணவி சர்மா, கோங்கடி திரிஷா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகி விருதை கோங்கடி திரிஷா வென்றார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles