டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்.

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை குவித்த வீரர்களின் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித் 15 ஆவது இடத்தில் உள்ளார்.

குறித்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 15,921 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், ரிக்கி பாண்டிங் 13,378 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளதுடன் ஜெக் கல்லிஸ் 13,289 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here