நான் படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

இதனிடையே விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான ‘ககன மார்கன்’ விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், புயலடிக்கிற வேகத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா, இவன் நடக்குற வேகத்த சகுனிக்கூட்டம் தாங்குமா” என்று பதிவிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here