குழந்தைகளுடன் நடனமாடி மகிழ்ந்த ரவிமோகன்

‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ரவி மோகன் தனது 34-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரவி மோகன் அரசியல்வாதியாக நடிக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டு இருந்தது.

சட்டசபையில் ரவி மோகன் பேசும் காட்சிகளுடன் வெளியான இந்த டீசரின் இறுதியில் இப்படத்தின் பெயர் ‘கராத்தே பாபு’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் டவ்டே ஜிவால் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் கே.எஸ்.ரவிக்குமார், நாசர், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பில் பிசியாக நடித்து வரும் ரவி மோகன், ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வரும் குழந்தைகளுடன் விளையாடி, நடனமாடி நேரத்தை செலவிட்டுள்ளார்.
மேலும் அங்குள்ளவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி ஆகியோர் 3 முறை சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இனி விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு விவாகரத்து வழக்கை வருகிற 15-ந்தேதிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles