யாழில் ஓய்வு பெற்ற ஆசிரியரின் விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில், பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (03) மாலை தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் – குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்துள்ளார்.

கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டு கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles