உத்தரவாத விலையில் பெரும்போகத்துக்கான நெல் கொள்முதல் இன்று முதல்!

பெரும்போகத்துக்கான நெல், அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெற்களஞ்சியசாலைகளில் இன்று முதல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து, நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.
நெல்லுக்கான உத்தரவாத விலை நேற்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோவொன்று 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோவொன்று 132 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பெரும்போகத்துக்கான நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுப் பல வாரங்கள் கடந்து விட்டதாகவும், தனியார் தரப்பினர் மிகக்குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்வதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
இந்தநிலையில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.
அதேநேரம், அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவித்துள்ள போதிலும் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் உத்தரவாத விலை போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles