Monday, February 2, 2026
HomeMain NewsUKபிரித்தானியாவை தாக்கவிருக்கும் 450 மைல் நீள பனிச்சுவர்!

பிரித்தானியாவை தாக்கவிருக்கும் 450 மைல் நீள பனிச்சுவர்!

பிரித்தானியாவின் பல பகுதிகள் 450 மைல் நீள பனிச்சுவரின் தாக்கத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளது.

பிரித்தானியாவில் 37 நகரங்கள் 450 மைல் அளவிலான பனிச்சுவர் (450-mile wall of snow) தாக்கத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் என புதிய வானிலை அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

இந்த 37 முக்கிய நகரங்கள் பனிமழையால் மூடப்படும் நிலையில் உள்ளன.

இந்த கடும்பனி எந்தெந்த பகுதிகளை தாக்கும்?
இங்கிலாந்து – பிரிமிங்ஹாம், பிராட்போர்ட், லீட்ஸ் உள்ளிட்ட 24 நகரங்கள்
ஸ்காட்லாந்து – அபர்டீன், எடின்பரோ, இன்பர்நெஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள்
வடக்கு அயர்லாந்து – ஆர்மாக், பெல்பாஸ்ட், லண்டன்டெர்ரி உள்ளிட்ட பகுதிகள்

ஸ்காட்லாந்தின் மையப்பகுதிகளில் வெப்பநிலை 0°C ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் பிற பகுதிகளில் 2°C முதல் 4°C வரை இருக்கும் என கூறப்படுகிறது.

கடுமையான குளிர்ச்சியால் பனிமழை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular