பாடசாலைகளுக்கு விடுமுறை

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்தின் மறுநாள் வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அறிவித்துள்ளதாக ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினத்துக்கான பதில் பாடசாலை மார்ச் முதலாம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் 27ஆம் திகதி வழமை போல் நடைபெறுமெனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் 27ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக மார்ச் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் நடைபெறும் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles