மன்னார் கடற்பரப்பில் 32 இந்திய மீனவர்கள் கைது!

மன்னாருக்கு வடக்காக உள்ள இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கையின்போது, குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, 5 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான மீனவர்களை தலைமன்னாருக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles