ரஷ்ய, அமெரிக்க பிரதிநிதிகளுக்கிடையேயான 2ஆவது சந்திப்பு அடுத்த இரு வாரங்களுக்குள்!

ரஷ்யா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையேயான இரண்டாவது சந்திப்பை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரஷ்யத் துணை வெளியுறவு அமைச்சர் சேர்ஜி ரியாப்கோவை (Sergel Ryabkov) மேற்கோள் காட்டி அந்த நாட்டின் அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக யுக்ரைனில் இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் ரஷ்யா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளிடையே கடந்த செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் விசேடமாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரச் சந்திப்பின் போது அமெரிக்க – ரஷ்ய இருதரப்பு உறவுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது யுக்ரைன் போரில் தீர்வை எட்டுவதற்கான முக்கிய நோக்கமாகக் கருதப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வாரம் ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles