ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம்  “அமரன்”.

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் பிலிம்ஸ், இத் திரைப்படத்தை தயாரித்திருந்த நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார்.

மேலும் இத்திரைப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸின் கதாபாத்திரத்தில் சாய்பல்லவியும் வெகு சிறப்பாக நடித்திருந்தனர்.

இந்திய இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத் திரைப்படம் உலக அளவில் 350 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்திருந்ததோடு ஏராளமான விருதுகளையும் அள்ளிக் குவித்தது.

இந்நிலையில் அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள உலக கலாசார திரைப்பட விருதுக்கான விழாவில் திரையிடுவதற்காகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 10 படங்களில் அமரன் திரைப்படமும் இடம்பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here