அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லத்துக்கு முன் காணப்படும் வாகன நிறுத்துமிடத்தில் விமானம் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கீழே விழுந்த சிறிது நேரத்தில் குறித்த விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானம் தீப்பிடித்ததையடுத்து வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட மகிழுந்துகள் தீக்கிரையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here