நாற்காலியுடன் வெளியேறினார் ஜஸ்டின் ட்ரூடோ!

கனடா பாராளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த ஜனவரியில், தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களின் செல்வாக்கை இழந்ததால், கட்சியின் ஒரு பிரிவினர் நெருக்கடியைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.

கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, பிரதமராக அவர் தொடருவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மார்க் கார்னி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த சில நாட்களில் அவர் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், இன்று புதிய பிரதமராகப் பதவியேற்க உள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார்.

தனது பதவிக்காலம் முடிவடைவதால், ஜஸ்டின் ட்ரூடோ தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அவர் பாராளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறினார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles