புஷ்பா 3 ஆம் பாகம் குறித்து புதிய தகவல்!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் 2021 இல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து ‘புஷ்பா 2 ‘ படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி 1,500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

இந்த நிலையில் புஷ்பா 3 ஆம் பாகம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

‘புஷ்பா’ படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது, ”புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிவித்தார்.

அல்லு அர்ஜுன் இரண்டு படங்களில் தற்போது நடித்து வருவதாகவும் , அந்த படங்களில் நடித்து முடித்ததும் புஷ்பா 3 ஆம் பாகத்தில் நடிப்பார் எனத் தெரிவித்தார்.

இந்த படம் 2028 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles