வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்புவ – மாதம்பே வீதியின் மாவதகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாத்தாண்டிய திசையிலிருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த லொறுயொன்று எதிர் திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, பின் இருக்கையில் அமர்ந்து வந்த சாரதியின் மனைவியும் லொறியின் சாரதியும் சிகிச்சைக்காக தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அவரது மனைவி மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் முச்சக்கரவண்டி சாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் 28 வயதுடைய தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.

சடலம் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை கொஸ்வத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles