தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராம் சரண். தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான சிரஞ்சீவின் மகனான இவர் மகதீரா படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.

இதை தொடர்ந்து ரங்கஸ்தலம், RRR ஆகிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

மேலும் தற்போது Peddi எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இது இவருடைய 16வது திரைப்படமாகும். இன்று இவருடைய பிறந்தநாள் என்பதால், இப்படத்தின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் ராம் சரணின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 1380 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்திய சினிமாவிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட நடிகர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 90 கோடி முதல் ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here