அமெரிக்காவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற போது நியூயார்க் ஹட்சன் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தகவலறிந்து நியூயார்க் தீயணைப்புத் துறை அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்

இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here