பண்டிகை காலத்தில் தூரப் பிரயாணங்களை மேற்கொள்வோரின் வசதி கருதி, விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக 500 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் 40 தொடருந்து சேவைகள் மேலதிகமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து, பதுளை, பெலியத்த, திருகோணமலை, கண்டி, அனுராதபுரம் மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு இந்த விசேட தொடருந்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here