போதைப்பொருளுடன் இலங்கை பெண் கைது

இந்தியாவின் பெங்களூரில் இருந்து சட்டவிரோதமாக குஷ் என்ற போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த இலங்கைப் பெண் ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது பயணப்பைக்குள் செயற்கையாக தயாரிக்கப்பட்ட மரப் பெட்டியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 3 கிலோ 290 கிராம் குஷ் என்ற போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட குஷ் போதைப்பொருளின் பெறுமதி 33 மில்லியன் ரூபாய் என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொழும்பு 10 ஐச் சேர்ந்த இளம் பெண் என்பதுடன், அவர் சுங்க வளாகத்தின் வழியாக வௌியேற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபரும் போதைப்பொருளும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles