இலங்கையின் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் பாப்பரசராக தெரிவு செய்யப்படகூடிய சந்தர்ப்பம்

இலங்கையின் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் , அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வொசிங்டன் எக்ஸாமினர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இடத்தை நிரப்பக்கூடியவர்களின் பட்டியலில் இலங்கையில் இருந்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பெயரும் இடம்பெற்றுள்ளது

அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படக்கூடியவர் என எவரின் பெயரும் இன்னமும் குறிப்பிடப்படாத நிலையில், பல ஊடகங்களில் மல்கம் ரஞ்சித்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை கத்தோலிக்க திருச்சபைக்குள் அவருக்குள்ள மதிப்பினையும் அங்கீகாரத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பியர் அல்லாத ஒருவர் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என்ற அபிப்பிராயம் அதிகரித்துள்ள நிலையில் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பெயர் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles