தேசபந்து தென்னகோனுக்கு அச்சுறுத்தல்

பதவி சார்ந்த கடமைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் கஞ்சிபானி இம்ரானிடமிருந்து அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என பொலிஸ் உயர் அதிகாரிகள் இருவர் நேற்று அறிவித்தனர்.

ஹோகந்தரவில் உள்ள தேசபந்து தென்னகோனின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்த பின்னர் இதனைத் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கஞ்சிபானி இம்ரான், தேசபந்து தென்னகோனை கொலை செய்ய தனது நெருங்கிய உதவியாளர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

பதவி சார்ந்த கடமைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பாதுகாப்பு நீக்கப்பட்டதன் ஊடாக அவரது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய புலனாய்வு அறிக்கை பொலிஸ் தலைமையகத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘யுக்திய’ உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பாதாள உலகக் கும்பலையும் போதைப்பொருள் கடத்தலையும் ஒழிப்பதற்காக அவர் முன்னெடுத்த முயற்சிகள் காரணமாக, ஏனைய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களிடமிருந்தும் கொலை மிரட்டல்கள் வரக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles