Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஇன்றும் நாளையும் நாடாளுமன்றம் கூடும்

இன்றும் நாளையும் நாடாளுமன்றம் கூடும்

நாடாளுமன்றம் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் கூடவுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஒத்திவைப்பு வேளையில், எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

அத்துடன், நாளைய தினம் ஹேஷா விதானகே, ரோஹண பண்டார, சமிந்த விஜேசிறி மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட 6 தனிநபர் பிரேரணைகள் மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular