கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் இதுவரை 16 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 35இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here