சதுரங்க விளையாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் விளையாட்டு பணிப்பாளரும், செய்தித் தொடர்பாளருமான அடல் மஷ்வானி கூறுகையில்,

“நாட்டின் நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின் படி இவ்விளையாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

சதுரங்க விளையாட்டிற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ள நிலையில் அது தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்.” என அவர் கூறினார்.

இந்த முடிவு சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் தொடர்புடைய வணிகங்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. முன்னதாக பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கத் தாலிபான் அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here