பர்கினோ பசோவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதேவேளை அந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இதனிடையே, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சில ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், ராணுவத்திற்கு ஆதரவாக சில ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதாக அந்நாட்டின் சொலன்சோ பகுதியில் உள்ள புலனி என்ற இனக்குழுவை சேர்ந்த ஆயுதக்குழுவினர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் கடந்த மாத இறுதியில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசு ஆதரவு குழுக்களும் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles