தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூர்யா. இவருடைய முந்தைய திரைப்படம் கங்குவா சரியாக போகவில்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது.

இதனால் ரெட்ரோ படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கடந்த மே 1ம் தேதி திரைக்கு வந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் கூட முதல் நான்கு நாட்கள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வரவில்லை.

இந்த நிலையில், 11 நாட்களை கடந்திருக்கும் ரெட்ரோ படம் உலகளவில் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 95.5 கோடி வசூல் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here