கல்கிஸ்ஸ, சில்வெஸ்டர் வீதிக்கு திரும்பும் சந்திப் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஒருவரை சுட்டுக் கொலை செய்திருந்தனர். மேலும் இந்த விவகாரம் குறித்து கல்கிஸ்ஸ பொலிஸ் மற்றும் கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வு பிரிவின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக குற்றத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 21 மற்றும் 32 வயதுடைய கல்கிஸ்ஸ மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here