தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் நடிக்கிறார்.

லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை ‘ரெமோ’ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த ‘விக்ரம், கைதி, லியோ’ போன்ற படங்களை போல, ‘பென்ஸ்’ படமும் (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) எல்.சி.யூ-வில் இணைந்துள்ளது.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கி இருக்கிறது.

இது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோவையும் படக்குழு வெளியிட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டுள்ளதாக அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here