முதல் போட்டியிலேயே ஜப்பானை வீழ்த்திய ரொனால்டோவின் மகன்

உலக கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் டோஸ் சாண்டோஸ் ஜூனியர் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி கால்பந்து உலகில் நுழைந்துள்ளார்.

செவ்வாயன்று நடந்த விளாட்கோ மார்கோவிக் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் போர்ச்சுகல் 15 வயதுக்குட்பட்ட பிரிவு தேசிய அணியில் இடம்பெற்ற சாண்டோஸ் அறிமுகமானார். இந்தப் போட்டியில், சாண்டோஸ் இடம்பெற்ற போர்ச்சுகல் இளைஞர் அணி ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

போர்ச்சுகல் அணிக்காக தனது மகன் அறிமுகமானதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” போர்ச்சுகல் அணிக்காக நீ அறிமுகமானதற்கு வாழ்த்துக்கள். உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!” என்று ரொனால்டோ பதிவிட்டார்.

இந்த கால்பந்து போட்டியைக் காண வந்த ரசிகர்கள் சாண்டோஸ் உடன் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டினர். அவரது தந்தை ரொனால்டோவை போலவே, மகன் சாண்டோஸ், 7 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles