விழாக்கோலமாக மாறும் சிங்கப்பூர் ! காரணம் தெரியுமா ?

பிரபல அமெரிக்கப் பாப் பாடகி லேடி காகா அடுத்த வாரம் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி படைக்கவுள்ளார்.

அதையொட்டி மரினா பே சேண்ட்ஸ் பல ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

மே 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை லேடி காகாவின் கருப்பொருளில் மரினா பே சேண்ட்சில் ஒளி மற்றும் நீர் நிகழ்ச்சி நடக்கிறது.

நாள்தோறும் இரவு 8.30 மணிக்கும் 9.30 மணிக்கும் அந்த நிகழ்ச்சி நடக்கும். அப்போது லேடி காகாவின் பிரபல பாடல்கள் ஒலிக்கும்.

மேலும் மரினா பே சேண்ட்ஸ் கட்டடத்திலும் அதன் நீர்க் கட்டமைப்பிலும் லேடி காகாவின் கருப்பொருள் சார்ந்த ஒளி நிகழ்ச்சி இருக்கும். அது இரவு 7 மணி முதல் 11.49 மணிவரை நடக்கும்.

இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை மரினா பே சேண்ட்ஸ் ஏற்பாடு செய்துள்ளது.

மே 18, 19, 21, 24 ஆகிய தேதிகளில் லேடி காகா தேசிய விளையாட்டரங்கில் இசை நிகழ்ச்சி படைக்கிறார். இதற்கு முன்னர் அவர் 2012ஆம் ஆண்டு சிங்கப்பூர் உள்ளரங்கில் மூன்று நிகழ்ச்சிகளைப் படைத்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles