மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரபலான பகுதியில், வீடுகளுக்குள் புகுந்து திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றத் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த யக்கல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் புதன்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வரபலான பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் ஆவார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, திருடப்பட்ட 05 மடிக்கணினிகள் மற்றும் 02 கையடக்கத் தொலைப்பேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here