டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2026-ம் ஆண்டிற்கான புதிய மாடலான ஸ்பீட் டிரிபிள் 1200 RX-ஐ வெளியிட்டுள்ளது.

இந்த மாடலில் ஸ்பீட் டிரிபிள் 1200 RS-ஐ விட ஸ்போர்ட்டியான கூடுதல் அம்சங்கள் உள்ளன. மேலும் இது “ஸ்பீட் டிரிபிளின் இறுதி அவதாரம்” என்று அழைக்கப்படும் அளவுக்கு சிறந்தது.

இந்த பைக் உலகளாவில் 1200 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

புதிய ஸ்பீட் டிரிபிள் 1200 RS அப்ரைட் ரைடிங் அனுபவத்தை வழங்காது, அதற்கு பதிலாக, இந்த பைக் சிறந்த அம்சங்களை பெற்றிருக்கிறது.

இதன் ஃபூட் பெக்குகள் சற்று பின்னால் அமைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் கிளிப்-ஆன் ஹேண்டில் பார்கள் பைக்கை ஓட்டுபவரின் கையை மேலும் முன்னோக்கி இருக்க செய்கிறது.

கூடுதலாக, இருக்கையும் வேறு வடிவத்தில் வருகிறது. அதைத் தவிர, பைக் டிரையம்ப் பெர்ஃபாமன்ஸ் எல்லோ ஸ்கீம் மற்றும் அக்ரபோவிக் சைலன்சரைப் பெறுகிறது.

இந்த பைக்கிலும், ஸ்பீட் டிரிபிள் 1200 RS தொடர்ந்து 1,160 சிசி இன்லைன்-மூன்று சிலிண்டர் எஞ்சின் உள்ளது.

இது 10,750 ஆர்பிஎம்மில் 180 ஹெச்பி பவரையும், 8,750 ஆர்பிஎம்மில் ரிவ் செய்யும் போது 127 என்எம் டார்க்கையும் வெளியிடும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்துடன் பை-டைரக்ஷனல் குயிக்-ஷிஃப்டருடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

சஸ்பென்ஷனை பொருத்தவரை RS மாடலில் இருந்து தக்கவைக்கப்பட்ட ஆலின்ஸ் SmartEC3 எலக்ட்ரானிக் செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் ஆலின்ஸ் SD EC எலக்ட்ரானிக் ஸ்டீயரிங் டேம்பரும் உள்ளன.

பிரேக்கிங் அமைப்பில் அதே டுவின் பிரெம்போ ஸ்டைல்மா மோனோபிளாக் காலிப்பர்கள் மற்றும் MCS ரேடியல் மாஸ்டர் சிலிண்டர் மற்றும் ஒரு கார்னரிங் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளன.

இத்துடன் கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல், முன்புறம் லிஃப்ட் கண்ட்ரோல், என்ஜின் பிரேக்கிங் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஐந்து ரைடிங் மோட்கள்: ரெயின், ரோடு, ஸ்போர்ட், டிராக் மற்றும் ரைடர் ஆகியவை உள்ளன. ட்ராக் பயன்பாடுகளுக்காக ரைடர் ரேக் ஸ்லைடு அசிஸ்ட் கொண்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here