ஹோண்டா நிறுவன லாபம் 24.5 சதவீதம் சரிவு

உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவை மையமாக கொண்டு செயல்படுகிறது. சீனாவில் வாகன விற்பனை சரிவு மற்றும் அமெரிக்காவின் வரி உயர்வு ஆகிய நடவடிக்கையால் இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியது. எனவே இதன் போட்டியாளரான நிசான் மோட்டார் வாகன நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாபம் முதல் காலாண்டில் 24.5 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் இதேநேரம் நிறுவனத்தின் லாபம் சுமார் ரூ.63 ஆயிரம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles