கடற்றொழிலாளர்கள் அவதானம்!

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில், இன்று முதல் நாளை மறுதினம் வரையில், மணிக்கு சுமார் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் எனவும், இதனால் குறித்த பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே, கடற்றொழிலாளர்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, மன்னாரிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தமையால், கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், தம்பலகாமம் பகுதியில் பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் வீட்டின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles