நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பு பேசிய சி.எஸ்.கே. அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி, “எனக்கு இப்போது 43 வயது ஆகிறது. நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடிவிட்டேன். ஐ.பி.எல். தொடரில் எனது கடைசி ஆண்டு என யாருக்கும் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். இந்த ஐ.பி.எல். முடிந்த உடன் அடுத்த 8 மாதத்துக்கு எனது உடல் இந்த அழுத்தத்தை தாங்குகிறதா என்பதை பார்க்க வேண்டும். ஓய்வு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. எல்லா இடங்களிலும் கிடைக்கும் ரசிகர்கள் அன்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

இந்நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

43 வயதான தோனி, ஓய்வு பெறுவது குறித்து எந்தவொரு தகவலையும் இன்னும் அணி நிர்வாகத்திடம் கூறவில்லை எனக் கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here