அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென பயங்கர சூறாவளி ஏற்பட்டது.

இந்த சூறாவளியின் தாக்கத்தால் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மிசோரி மாகாணத்தில் செயின்ட் லூயிஸ் நகரில் மட்டும் 5 ஆயிரம் கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

சூறாவளி தாக்கியதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.

மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதம் அடைந்தன.

பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டது.

மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட தடையால் 300,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்து.

இந்த சூறாவளி தாக்குதலில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.

தற்போது கென்டக்கி, மிசோரியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுவரை சூறாவளியால் 27 பேர் உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சூறாவளியால் பலரும் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here