ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நாளை காலை 10:00 மணிக்கு தொலைபேசியில் உரையாட உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் இதன்போது உரையாட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ரஷ்ய ஜனாதிபதியுடன் உரையாடிய பின்னர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் சில நேட்டோ நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனியாக உரையாடவுள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த உரையாடல் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here