லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆசை – நடிகர் சூரி

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி.

வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார்.

அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது.

அதனை தொடர்ந்து, ‘கருடன், கொட்டுக்காளி’ , ‘விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக வெற்றிகளைக் குவித்தது.

கொட்டுக்காளி படம் சர்வதேச நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் வெற்றிகளைக் குவித்தது.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் கடந்த 16-ந் தேதி ‘மாமன்’ படம் வெளியானது.

இதனை விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பண்டிராஜ் இயக்கியுள்ளார்.

லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், பாலா சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

‘மாமன்’ படத்தில் மிரட்டலான தோற்றத்தில் நடித்து வருகிறார் சூரி.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இதற்கிடையில் ‘மாமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது லோகேஷ் கனகராஜ், என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பத்து கதைகள் வந்தால் அதை ஐந்து கதைகள் சூரிக்காக வருகிறது என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக சமீபத்தில் நடந்த பேட்டியில் சூரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சூரி, “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

டாப் இயக்குனர்களில், இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் முக்கியமான ஒருவர்.

அவருடைய தயாரிப்பின் கீழ் மூன்று கதைகளை சொல்லி இருக்கிறார். வருங்காலத்தில் அவருடைய தயாரிப்பில் நான் நடிப்பேன் என்று நினைக்கிறேன்.

இது தவிர அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது.

அதுவும் நடக்கும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles