வசூலில் டல் அடிக்கும் DD NEXT LEVEL

இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் DD Next Level. இப்படத்தை ஆர்யா தயாரித்திருந்தார்.

ஹாரர் காமெடி கதைக்களம் என்றாலே சந்தானம் அதில் மிரட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், DD Next Level திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது.

படத்தில் சில காட்சிகள் நன்றாக இருந்தாலும், பல காட்சிகளில் அரைத்த மாவையே தான் மீண்டும் அரைத்து வைத்துள்ளனர் என விமர்சனங்கள் கூறுகின்றன. இதனால் முதல் நாளில் இருந்த இப்படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை.

இந்த நிலையில், நான்கு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் DD Next Level திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சந்தானத்தின் DD Next Level படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 10 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles