இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்த நிலையில், இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விக்ரம் ரத்தோர் கூறுகையில் “இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு எளிதாக இருக்கப் போவது இல்லை. ஏனென்றால் சீனியர் வீரர்கள் 3 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.

ஆகவே, இளம் அணி விளையாட இருக்கிறது. புதிய கேப்டன் அணியை வழி நடத்த இருக்கிறார்.

இந்த அனைத்து விசயங்களும், கூடுதலாக நெருக்கடியை ஏற்படுத்தும். இருந்தபோதிலும், இளம் வீரர்கள் தங்களுடைய திறமை மற்றும் திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கும்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here