உக்ரைன் படைகள் ஆக்கிரமித்த குர்ஸ்க் பிராந்தியத்திற்கு ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம்!

ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மீது படையெடுத்தது.

இரு நாட்டின் எல்லைகளில் உள்ள உக்ரைனின் பெரும்பாலான இடங்களை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் (பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள்) உதவியுடன் ரஷியாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்தது. சில இடங்களில் ரஷியா பின்வாங்கியது.

பின்னர் தரைவழி தாக்குதலை குறைத்துக் கொண்ட ரஷியா, உக்ரைன் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் நுழைந்தது.

அப்பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நகரங்களை கைப்பற்றியது. இது ரஷியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2ஆவது உலகப் போருக்குப்பின் ரஷியா நிலப்பரப்பில் அடுத்த நாட்டின் ராணுவம் நுழைவது இதுவே முதல்முறையாகும்.

இதனால் உக்ரைன் படைகளை விரட்டியடிக்க ரஷியா ராணுவம் கடுமையாக சண்டையிட்டது.

கடந்த 26ஆம் தேதி, குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் படைகள் முற்றிலுமாக விரட்டியடிக்கப்பட்டது என ரஷிய ராணுவம் தெரிவித்தது. ஆனால் உக்ரைன் அதிகாரிகள் இதை மறுத்தனர்.

இந்த நிலையில் நேற்று ரஷிய அதிபர் புதின் குர்ஸ்க் பிராந்தியம் சென்றதாக, ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

குர்ஸ்க் அணுஆயுத நிலையம்-2 கட்டப்பட்டு வருகிறது.

இதை புதின் பார்வையிட்டுள்ளார்.

மேலும், குறிப்பிட்ட தன்னார்வலர்களுடன் ரகசியமாக பூட்டிய அறையில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அத்துடன் பொறுப்பு கவனர் அலேக்சாண்டர் கின்ஸ்டெய்ன் உடனும் பேசியுள்ளார்.

உக்ரைன் ஆக்கிரமிப்பால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்யப்படும் என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு முழுவதும் 159 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன ராணுவத்தை பின்வாங்க செய்ய, ரஷியாவுக்கு ஆதரவாக 12 ஆயிரம் வீரர்களை வடகொரியா அனுப்பியதாக உக்ரைன், அமெரிக்கா மற்றும் தென்கொரிய குற்றம்சாடடியது. பின்னர் வீரர்கள் அனுப்பப்பட்டதாக வடகொரியா ஒப்புக்கொண்டது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles