கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இருவரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது வழக்கை விசாரித்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி குறித்த இருவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதன்படி இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை எதிர்வரும் ஜுன் மாதம் 4 ஆம் திகதி வரையும், மற்றைய நபரை இம்மாதம் 23 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை பிரதான சந்தேக நபரை ஜுன் மாதம் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

இந்த இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles