Monday, February 2, 2026
HomeLife Styleமுகம் ஜொலிக்க இனி பார்லருக்கு போக வேண்டாம்... இதை ட்ரை பண்ணுங்க

முகம் ஜொலிக்க இனி பார்லருக்கு போக வேண்டாம்… இதை ட்ரை பண்ணுங்க

பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள பார்லருக்கு செல்கிறார்கள்.

அங்கு ஆயிரம், இரண்டாயிரம் என செலவு செய்து முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்கிறார்கள்.

அதுவும் மாத மாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கவலையை விடுங்க.. இனி பெண்கள் பார்லருக்கு போக வேண்டிய அவசியமே இல்லை.

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாக மாற்றலாம்.

அதுவும் கோதுமை மாவு இருந்தாலே போதும்.

கோதுமை மாவு உபயோகித்து சப்பாத்தி, பூரிதான் போட முடியும் என்பதில்லை.

கோதுமை மாவு உபயோகித்து முகம், கழுத்து மற்றும் கைகளை பளபளப்பாகவும் பிரகாசமாகவும் ஜொலிக்க வைக்க முடியும்.

கோதுமை மாவு ஃபேஸ் பேக் எப்படி போடலாம் என்று தெரிந்து கொள்ளலாம் .

கோதுமை மாவு ஃபேஸ் பேக் போடும் முறை:

ஒரு கிண்ணத்தில் மூன்று ஸ்பூன் கோதுமை மாவு, அரை ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

இவற்றுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.

முதலில் முகத்தை காய்ச்சாத பசும்பால் வைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதற்கு சிறிதளவு பசும்பாலை முகத்தில் தடவி ஒரு காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுக்கவும்.

பின்பு கண் பகுதியை தவிர்த்து விட்டு கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து முகத்தில் கீழிருந்து மேலாக கோதுமை மாவு பேஸ்ட்டை அப்ளை செய்யவும்.

சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்யவேண்டும்.

இது இறந்த சரும செல்களை வெளியேற்றவும் ரத்த ஓட்டத்தை தூண்டவும் உதவும். ஃபேஸ் பேக் காயும் வரை காத்திருக்க வேண்டும்.

ஆனால் முகத்தோடு ஒட்டிப் போகும் அளவு காய்ந்துவிடக் கூடாது.

பத்து நிமிடம் ஃபேஸ் பேக் காயும் வரை பொறுத்திருந்து, லேசாக ஈரப்பதம் இருக்கும்போது முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி மென்மையாக பேஸ்பேக்கை ஒத்தி எடுக்கவும்.

பின்பு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவினால் முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular