ஜப்பான் மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்

ஜப்பானில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் சில பகுதிகளில் வெப்பம் 30 பாகை செல்சியஸைத் தாண்டியது.

வடகிழக்கே புக்குஷிமா பகுதியிலிருந்து மேற்கே ஹியொகொ வரை விரைவில் வெப்பம் 34 பாகை செல்சியஸைத் தொடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கே யேயாமா (Yaeyama) வட்டாரத்தில் முதன்முறை அனல்காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அதிகளவில் தண்ணீர் அருந்தும்படியும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

மிதமிஞ்சிய சூட்டைத் தணிக்கும் நடவடிக்கைக்கு ஏற்ப, தோக்கியோவாசிகளுக்குத் தண்ணீருக்கான அடிப்படைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த நான்கு மாதத்துக்கு 250 மில்லியன் டொலர் மதிப்புள்ள்ள மானியத் திட்டம் நடப்பிலிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

செலவைக் குறைப்பதற்காக மக்கள் குளிரூட்டிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் என டோக்கியோ ஆளுநர் கவலை வெளியிட்டுள்ளார்.

சென்ற ஆண்டு கோடையின்போது மக்கள் வீடுகளில் குளிரூட்டியை அணைத்து வைத்தனர். வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் சிலர் உயிரிழந்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles