இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளில் பெய்த கடும் மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாகப் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இரவு முழுவதும் பெய்த கடும் மழையுடனான வெள்ளப்பெருக்கு காரணமாக பாரிய மரங்கள் வேரோடு சாய்ந்ததாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி கொண்டோன்மென்ட் மற்றும் தீன் தயாள் ஆகிய இடங்களில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அத்துடன், இந்திரா காந்தி விமான நிலையத்தில் பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சில விமான சேவை நிறுவனங்கள் தமது சேவைகளை வழமைக்குக் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here