மஹிந்தவுடன் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மதம், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளிலான இருதரப்பு தொடர்புகள் மேலும் பலமடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். பழைய நண்பரின் வருகை கடந்த காலங்களை நினைவுபடுத்தியுள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரால் (ஓய்வுநிலை)பஹீம் உல் அசீஸிடம் நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரால் (ஓய்வுநிலை)பஹீம் உல் அசீஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு அண்மையில் கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தை உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

இலங்கை நெருக்கடியான நிலையை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

யுத்தகாலத்தில் பாகிஸ்தான் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதால் விடுதலை புலிகள் அமைப்பு கொழும்பில் இருந்த அப்போதைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகளை கொலை செய்ய முயற்சித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles