சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஐந்துபேர், பனிச்சறுக்கு விளையாடச் சென்ற நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ள விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தின் Zermatt நகருக்கு மேலாக அமைந்துள்ள சுவிஸ் ஆல்ப்ஸ் மலைக்கு பனிச்சறுக்கு விளையாட இரண்டு பேர் சென்றுள்ளார்கள்.

அப்போது, பனிச்சறுக்கு விளையாடுவோர் அணியும் உபகரணங்கள் கேட்பாரற்றுக் கிடப்பதை அவர்கள் கவனித்துள்ளார்கள்.

உடனடியாக அவர்கள் Valais பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் ஹெலிகொப்டர் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து, ஓரிடத்தில் மூன்று பேரின் உயிரற்ற உடல்களும், மற்றொரு இடத்தில் இரண்டுபேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

தேடுதல் நடவடிக்கையின்போது ஐந்து ஜோடி பனிச்சறுக்கு உபகரணங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, ஐந்து பேர் பனிச்சறுக்கு விளையாடச் சென்று பலியானது உறுதி செய்யப்பட்டது.

பலியானவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது முதலான எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. சுவிஸ் அதிகாரிகள் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here