டிரம்ப் பெயரில் மோசடி : AI வீடியோ மூலம் இந்தியாவில் 200 பேரிடம் ரூ.2 கோடி மோசடி…!

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்தாலும், அதை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றுவதும் அதிகரித்து வருகிறது.

அரசு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சைபர் குற்றவாளிகளிடம் இந்தியர்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர்.

தற்போது அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்பை வைத்து கர்நாடகாவில் 150 பேரிடம் மோசடி நடந்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் தனது ஹோட்டலில் முதலிடு செய்ய கூறுவது போல் AI மூலம் போலியான வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

மேலும், அந்த வீடியோவில் டிரம்ப் ரெண்டல் என்ற செயலியை டவுன்லோட் செய்யுமாறு டிரம்ப் பேசுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் முதலீடு செய்வதன் மூலம், விரைவில் பணம் இரட்டிப்பாகும் என்றும், வீட்டில் இருந்தே செய்யும் செய்யும்படி யான வேலை வாய்ப்பு வழங்கப்படும் என பாதிக்கப்பட்டவர்களிடம், மோசடியாளர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

அதை நம்பிய மக்களும், அவர்கள் கூறியவாறு கணக்குகளை தொடங்க ₹1,500 செலுத்தியுள்ளனர். அதனையடுத்து நிறுவன விவரங்களை எழுதுவது போன்ற சிறு சிறு வேலைகளை வழங்கியுள்ளனர்.

அதற்கு சன்மானமாக ரூ.30, ரூ.300 போன்ற சிறிய சிறிய தொகைகளை வழங்கியுள்ளனர். அதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

சிறிது நாட்களுக்கு பின்னர் பணம் வருவது முற்றிலும் நின்று விட்டது. இதே போல், ஹாவேரியில் மட்டும் 15 பேர் ஏமாந்துள்ளனர்.

மொத்தமாக 200 பேரிடம், ரூ.2 கோடிக்கு அதிகமாக மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles